கம்போடியாவில் சிக்கித் தவிக்கும் 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க கோரிக்கை

0 295
Stalin trichy visit

புதுக்கோட்டை சேர்ந்த சையத் இப்ராஹிம் என்ற இளைஞர் புரோக்கர் ஷானவாஸ் மூலமாக 3 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தி பிசினஸ் விசா எடுத்துக்கொண்டு கம்போடியா நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இந்தியாவை டார்கெட் வைக்கும் அக்கவுண்டில் இருந்து பணம் திருடும் முறை ஸ்கேனிங் ஒர்க் மூலம் நூதன முறையாக கால் செய்து ஏடிஎம் நம்பர் மற்றும் உங்கள் அக்கவுண்ட் டீடைல் கேட்டு பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பலிடம் மாட்டிக்கொண்ட இளைஞர். தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டு ஒரு தலைக்கு 4000 டாலர் என சீனாவை சேர்ந்த மோசடி கும்பலிடம் விற்று விடுகிறார்கள். கால் செய்து ஏமாற்றவில்லை என்றால் அடிக்கிறது, கரண்ட் ஷாக் வைப்பது, துப்பாக்கி முனையில் மிரட்டுவது, உணவு தராமல் ஏமாற்றுவது இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோல் தமிழ்நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கம்போடியா வங்கி கணக்கு மோசடி கும்பலால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும்படி அந்த இளைஞர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.