வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
திருச்சிமாவட்ட ஆட்சியரகத்தில் வனம் சார்ந்த வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி வனப்பாதுகாவலர்கள் சம்பத்குமார், சரவணக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, வனச்சர அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.