தண்ணீர் அமைப்பின் சார்பில் மாசில்லா தீபாவளி
தண்ணீர் அமைப்பின் சார்பில் மாசில்லா தீபாவளி, மரக்கன்றுகளுடன் தீபாவளி விழிப்புணர்வு வீதி நாடகம் நிகழ்வு 21.10.22 மாலை 3.30 மணிக்கு எடைமலைப்பட்டி புதூர் மாநகராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கம் மாநில ஆலோசகரும், தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் .கே.சி. நீலமேகம், தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பு செயலாளர், கலைக்காவிரி பேரா.கி.சதீஷ்குமார் தலைமையில் விழிப்புணர்வு வீதி நாடகம் வெடிகளைத் தவிர்ப்போம் செடிகளை வளர்ப்போம் நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

இந்நாடகத்தில் நச்சு வெடிகள் குறைத்து, நல்ல மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம் என்றும் வெடிகளால் ஏற்படும் விபத்துகள், ஆபத்துகள், குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை, அனைத்து உயிர்களுக்கும் வெடிகள் ஏற்படுத்தும் இன்னல்கள்,நோய்கள், குறித்து நாடகம் நடத்தப்பட்டது. வெடிச்சத்தம் வெடிப்பு கையால் ஏற்படும் வளிமண்டல நச்சு மிகுகரும்புகை மாசு , பறவைகள், விலங்குகள், கர்ப்பிணிகள் ஆகியோர்க்கு வெடியால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் அரங்கேறியது.
இந்நாடகத்தில் கலைக்காவிரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் ,ஆகாஷ், விஜய், ஹரிணி, கீதாஞ்சலி மற்றும் தொடக்கப் பள்ளி சிரார்கள். ஆகியோர் பங்கேற்றனர்.
நிறைவாக பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் வட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ,பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி புஷ்பலதா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றார்.
நிறைவாக வெடிகளைத் தவிர்ப்போம் செடிகளை வளர்ப்போம் என உறுதி மொழி ஏற்று பசுமை தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்