காதல் தோல்வியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0 317
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் காதல் தோல்வியால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கம்மாளத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணி மகன் 27 வயதான கண்ணன். இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண் இவரை ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மது அருந்த தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.