ரயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனை

0 274
Stalin trichy visit

திருச்சி, அக். 27 கோவையில் கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு, சோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் சோதனை மூலம் அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தேகப்படும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது தவிர மோப்பநாய் மூலம் பார்சல்கள் சோதிக்கப்படுகிறது. ரயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.