அய்யன் வாய்க்காலில் முதலை நடமாட்டம் என பீதியை கிளப்பும் பழைய வீடியோ
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள அய்யன் வாய்க்காலில் முதலை நடமாட்டம் இருப்பதாக பழைய வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் உலாவருவதால் மக்கள் பீதியைடைந்தனர்.
கடந்த சில வருடங்களாக கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகமானதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியையும் எட்டியது.இதனையடுத்து காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அளவுக்கு அதிகமாக வரும் தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் உபரிநீராக திறக்கப்படும். மேலும் பாசனத்திற்காக புள்ளம்பாடி பெருவளை மற்றும் அய்யன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் கடந்த வருடம் திறக்கப்பட்ட தண்ணீரில் குட்டி முதலை ஒன்று தப்பித்து வந்தது.இதில் பாசனத்திற்காக முக்கொம்புலிருந்து அய்யன் புள்ளம்பாடி பெருவளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் கடந்த வருடம் ஒரு முதலை குட்டி சிறுகாம்பூரில் உள்ள அயன் வாய்க்காலில் பகுதியில் சுற்றி வந்தது. அதை யேரோ ஒருவர் வீடியோ எடுத்து பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையாக இருக்கும்படி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பழைய வீடியோ அய்யன் வாய்க்காலில் முதலை சுற்றுவதாக பீதியை கிளப்பும் வகையில் மீண்டும் சமூக வலைதலங்களில் வலம் வருகிறது.