ஊட்டத்தூரில் இறந்தவரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

0 277
Stalin trichy visit

ஊட்டத்தூரில் மீட்ட ஆண் சடலம் அடையாளம் தெரிந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூரில் கடந்த 26 ந்தேதி மீட்ட அடையாளம் தெரியாதா ஆண் சடலத்தின் அடையாளம் போலீசார் விசாரணையில் தெரிந்தது.

ஊட்டத்தூரில் பெயர் விலாசம் தெரியாத 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் அவ்வழியே சென்றுள்ளார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் நெஞ்சு வலிக்குது என தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். பின்னர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இவருடைய பெயர் விலாசம் எதுவும் தெரியவில்லை. அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வந்துள்ளார். இவர் மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது இது குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஊட்டத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினார் விசாரணையில் இறந்து போனவர் சென்னை அனகாபுத்தூர் காமராஜபுரம் தென்றல் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் 55 வயதான மரியசூசை என தெரியவந்தது. இவர் கடந்த 10 வருடத்துக்கு முன்பு தனது குடும்பத்துடன் சண்டை போட்டு பிரிந்து வந்ததாகவும் ஊட்டத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு கல் குவாரிகளில் வேலை செய்து அப்பகுதியில் தங்கி வந்துள்ளார் என தெரிய வந்தது. இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிடம் உடற்கூறு ஆய்வு முடித்து சடலத்தை சிறுகனூர் போலீசார் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.