திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0 338
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை விவசாயிகள் குறைத்திருப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை கூறிவருகின்றனர். இக்கூட்டத்தில் வேளாண் பணித்துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் திருச்சி மாவட்டத்தில் தெரியப்படுத்தப்படும் விவரங்களை அந்தந்த துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2 வருடத்தில் 59 கிராமங்கள் செயல்படுத்தப்பட்டது. 2022.23 ஆண்டிற்கு 108 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23-ஆம் நிதியாண்டில் சிறு, குறு மற்றும் இதரி

விவசாயிகளுக்கு மா, கொய்யா அடர்நடவு, எலுமிச்சை பரப்பு விரிவாக்கம், வீரிய காய்கறி சாகுபடி பரப்பு விரிவாக்கத்தில் மிளகாய், கத்தரி மற்றும் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் விநியோகம், உதிரி மலர்களாகிய மல்லிகை, இக்ஸோரா பரப்பு விரிவாக்கம், கிழங்கு வகை மலர்களாகிய சம்மங்கி பரப்பு விரிவாக்கம் ஆகிய இனங்களுக்கு மானியம் வழங்க இலக்குகள் பெறப்பட்டுள்ளன. மழைநீரை வீணாக்காமல் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்திக் கொள்ள பண்ணைக்குட்டைகள் அமைக்கவும் மானியம் வழங்கப்பட உள்ளது. அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களான சிப்பம் கட்டும் அறை, அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்து சந்தைப்படுத்துவதற்கும், நடமாடும் காய்கறி வண்டிகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் ரூ.914.8048 இலட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.91.74 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு 1500 எக்டர் இலக்கு பெறப்பட்டு நடப்பு மாதம் வரை 91.93 எக்டர் பரப்பளவிற்கு பணி ஆணை வழங்கப்பட்டு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் பணி நடைப் பெற்று வருகிறது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தவும் விவசாயிகள் அனைவரும் பயனடையும் நோக்கத்தோடு துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் (SWMA) என்ற திட்டத்தில் 2022-23 ஆண்டு ரூ.540.2 இலட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள், டீசல் / மின்மோட்டார், PVC குழாய்கள் மற்றும் தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டிகள் அமைப்பதற்கு இது வரை ரூ.55.38 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.62.79 இலட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டுள்ளது. வாழை மற்றும் தென்னையில் ஊடு பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல், துல்லிய பண்ணைத் திட்டம், நகர்புற மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளையும் கீரைகளையும் வளர்த்துப் பயன்பெறும் வகையில் ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் செங்குத்து தோட்டம், உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கு உழவர் சந்தை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடி செய்வோருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல், தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகாரணங்கள் வழங்குதல், வெற்றிலை சாகுபடியில் உர மற்றும் பூச்சி மேலாண்மைக்கு மானியம்

வழங்கப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் வெங்காய பயிருக்கு 60.09 ஹெக்டர் பரப்பளவில் 83 விவசாயிகளும் ராபி பருவத்தில் மரவள்ளி பயிருக்கு 2.09 ஹெக்டர் பரப்பளவில் 5 விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் பயிர் பல்வகைப்படுத்துதல் இனத்தில் 788.935 ஹெக்டேர் பரப்பளவிற்கு வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி, முருங்கை மற்றும் வாழைகட்டைகள் சாகுபடிக்கு 176.537 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 214.77ஹெக்டேர் பரப்பும் 194 இலட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு நடைபெற்று தற்போது ரூ.8.535 இலட்சம் மானியமாக வழக்கப்பட்டுள்ளது..

விவசாயிகள் நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள உழவன் செயலி மூலமாகவும் (tnhorticulture.tn.gov.in/tnhortnct) என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து சம்மந்தப்பட்ட வட்டார “தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

வேளாண்மைப் பொறியியல் துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் இத்துறை மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள்

1. நில மேம்பாட்டுத் திட்டம் :

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிலமேம்பாடு மற்றும் உழுவை வாடகைத் திட்டத்தின்கீழ் செயல்பட திருச்சி கோட்டத்தில் 3 மணிதள்ளும் இயந்திரங்கள். 42 உழுவை இயந்திரங்கள். 3 மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் 2 கதிர் அறுவடை செய்யும் இயந்திரங்கள் உள்ளன.

நிலமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மண்தள்ளும் இயந்திரம் விவசாய பணிகளுக்கு ஒரு மணிக்கு ரூ.1230/-க்கும், விவசாயம் அல்லாத பணிகளுக்கு (Private Hirers / Contractors) ஒரு மணிக்கு ரூ.1550/-க்கும் வாடகைக்கு விடப்படுகிறது.

உழுவை வாடகைத் திட்டத்தின் கீழ் உழுவை இயந்திரம் விவசாயப் பணி

மற்றும் விவசாயம் அல்லாத பணி இரண்டிற்கும் ஒரு மணிக்கு ரூ.500/- வீதம்

வாடகைக்கு விடப்படுகிறது.

மண் அள்ளி சமன்படுத்தும் இயந்திரம் விவசாயப் பணிகளுக்கு ஒரு மணிக்கு ரூ.890/-க்கும். விவசாயம் அல்லாத பணிகளுக்கு (Private Hirers / Contractors) ரூ.1250/-க்கும் வாடகைக்கு விடப்படுகிறது. கதிர் அறுவடை இயந்திரம் டிராக் வகை

விவசாய பணிக்கு ரூ.1880/-க்கு வாடகைக்கு விடப்படுகிறது. 2. சிறுபாசனத் திட்டம்.

நிலத்தடி நீர் விவரத்தினை அறிவியல் ரீதியில் நில பெளதீக ஆய்வு கருவிகள் கொண்டு ஆய்வு செய்து கிணறு / குழாய் கிணறு அமைவிடம் தேர்வு செய்து தரப்படுகிறது. விவசாய பணிகளுக்கு ரூ.500/-ம் விவசாயம் அல்லாத பிற பணிகளுக்கு ரூ.1000/-ம் வீதம் ஆய்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

3. சோலார் பம்ப் அமைக்கும் திட்டம் : சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் ஆர்வமுடைய விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் வழங்கப்படும். 4. வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டம் 2022-23 :

வேளானி இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின்கீழ் டிராக்டர், நெல்நடவு இயந்திரம், பவர்டில்லர். களைஎடுக்கும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் கருவிகளை www.agrimachinery.nicin மற்றும் உழவன் செயலியில் தாங்களே பதிவு செய்து முன்னுரிமை பெற்று இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

5. வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாடகை மையம் திட்டம் :

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சிறு மற்றும் குறு விவசாயிகள் சொந்தமாக வாங்க இயலாத நிலையில், நியாயமான வாடகையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

ஒரு வாடகை மையம் அமைக்க ஆகும் உத்தேச மதிப்பீட்டுத் தொகை ரூ.25.00 இலட்சத்தில் அதிகபட்சமாக 40% தொகை அல்லது ரூ.10.00 இலட்சம் வரை

மானியமாக வழங்கப்படுகிறது. 6. அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி செய்ய இயந்திரங்கள் வழங்கும் பணி

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அறுவடை செய்த பிறகு. தானியங்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக தரம் உயர்த்தி விற்பனை செய்யும் நோக்கில் சிறிய ரக மாவு அரைக்கும் இயந்திரங்கள், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் அதிகபட்சமாக 40% சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 7. பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி.

மழை பெய்கின்றபோது வேளாண் பெருங்குடி மக்கள் தங்கள் நிலத்தில் வழிந்தோடும் மழை நீரை தங்கள் நிலத்திலேயே சேமித்து வைத்திட பண்ணைக்குட்டை அமைக்கும் பணி . 100% மான்யத்தில் வேளாண் பொறியியல்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.