திருச்சி மாநகரில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலை, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ரவுடிகள், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்தும், மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செக்போஸ்ட் அமைத்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக, திருச்சி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பல்வேறு வழக்குளில் தொடர்புடைய நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாநகரில் குறைந்த நாட்களில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையிலும், சமூக விரோத செயல்களிலும் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.