தா.பேட்டை அருகே தனியார் பேருந்து மோதி விவசாயி பலி…

0 303
Stalin trichy visit

தா.பேட்டை அருகே ஜடமங்கலம் கிராமத்தை சேர்ந்வர் விவசாயி குணசேகரன் (65). சம்பவத்தன்று இவர் தனது மனைவியை மொபட்டில் வாளசிராமணி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மொபட்டுக்கு போட்டு கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வாளசிராமணி – ஜடமங்கலம் செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் குணசேகரன் தலையில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குணசேகரன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் தனியார் பஸ் டிரைவர் ராஜகோபால் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.