மேக்னா சில்க்ஸில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் …

0 361
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி, மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில்
கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

கடந்த புதன்கிழமை காலை வருமான வரி துறையினர் முசிறி துறையூரில் இயங்கும் மேக்னா சில்க்ஸ் ஜவுளி கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனை இரவு பகலாக தொடர்ந்தது சோதனையில் ஜவுளி ரகங்கள் மில்களில் இருந்து கொள்முதல் செய்தது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வெளியில் இருந்து ஜவுளி ரகங்கள் வாங்கியதற்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா, அதேபோல் விற்பனை செய்ததற்கு வரி முறையாக அரசுக்கு கட்டப்பட்டுள்ளதா என்பதனையும் சரிபார்த்தனர். கடையில் உள்ள ரொக்கம் வங்கிக் கணக்கில் இருப்பு ஆகியவற்றையும் சோதனை செய்தனர்.இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து நாளாக நடைபெற்ற சோதனை இன்று முடிவு பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் முசிறி துறையூரில் இயங்கி வந்த பிரபல மேக்னா சில்க்ஸ் ஜவுளி கடையில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.