ஊட்டத்தூரில் இரு குடும்பத்திற்கு இடையே மோதல் : 3 பேர் காயம் 7 பேர் மீது வழக்கு பதிவு

0 384
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட முன்விரோத தகராறில் ஒருவரையெருவர் தாக்கிக் கொண்டதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். ஏழு பேர் மீது வழக்கு பதிவு. இருவர் கைது.

ஊட்டத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் 53 வயதான பொன்னுசாமி அதே பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான முருகேசன். முருகேசன் மகன் ஜெயசீலன் பொன்னுசாமி மகன் ஜெயசூர்யா இருவரும் நண்பர்கள்.கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு காட்டுப்பகுதிக்கு ஜெயசீலனும் ஜெயசூரியனும் சென்றுள்ளனர். அப்போது ஜெயசீலன் மரத்தில் ஏறிய மரம் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார் இந்நிலையில். ஜெயசீலனை கூட்டிச் சென்றதால் தான் அவன் இறந்து விட்டான் என முருகேசன் ஜெயசூரியன் அப்பா பொன்னுசாமியை திட்டி உள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது.இந்த தகராறில் இரு குடும்பத்திற்கும் முன்விரதம் ஏற்பட்டுள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக கடந்த 8 ம் தேதி இரு குடும்பத்திற்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது.இந்த தகராறில் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி அவரது உறவினர்களான சரண்யா, ராமச்சந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் முருகேசன் மற்றும் அவரது உறவினர்களைச் சேர்ந்த ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்,.இந்த வழக்கு விசாரணை நடைப்பெற்று முருகேசன் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.