காட்டுபுத்தூர் பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி : செயல் அலுவலர் ஆய்வு

0 271
Stalin trichy visit

காட்டு புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியினை செயல் அலுவலர் ஆய்வு

காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

தற்போது மழை காலம் என்பதால் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாகி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து கொசு பரவுவதை தடுக்க நவீன கொசு ஒழிப்பு இயந்திரம் மூலம் காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கியது.
இப்பணியினை செயல் அலுவலர் சாகுல் அமீது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய நவீன இயந்திரம் மூலம் அதிக அளவு புகை வருவதால் கொசு மருந்து அடிக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து பணிகளை மேற்கொள்ளுமாறும் பேரூராட்சி பணியாளர்களுக்கு செயலாளர்கள் அறிவுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.