வாக்குச்சாவடி முகவர்களுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
கழகத் தலைவர் -வாக்குச் சாவடி முகவர்களுடன் காணொலிவாயிலாகக் கலந்துரையாடல்
திருச்சி தெற்கு மாவட்டத்தினருக்கு – மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்!முதல்வர், கழகத் தலைவர் அவர்கள். திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிக ளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களுடன் (BLA-2) காணொலிக் காட்சி வாயிலாக இன்று (12.11.2022 சனிக்கிழமை) மாலை 6 கலந்துரையாடுகிறார்.
1.மணப்பாறை சட்டமன்ற தொகுதி ஆர்மோன்ஸ் மஹால் மணப் பாறை.
2.திருச்சி கிழக்கு தொகுதி, சிதம்பர மஹால் சிந்தாமணி அண்ணா சிலை அருகில்.
3.திருவெறும்பூர் தொகுதி. முத்துமணி மஹால் காட்டூர். இந்த நிகழ்வுகளில் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி கண் காணிப்பு குழு நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வாக்குச்சாவடி முகவர்களின் பெயர்ப் பட்டியலை கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் கையில் வைத்துக் கொண்டு முழுமையான அளவில், முகவர்கள் வருகை தருவதை உறுதி செய்யும் வகையில். பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்களு டன் இணைந்து. ஒருங்கிணைத்து சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.