அரசு மாணவிகள் விடுதியில் காய்கனி தோட்டம் அமைத்து அசத்தல்
தா.பேட்டையில் அரசு மாணவிகள் விடுதியில் வீட்டு தோட்டம் அமைத்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தா.பேட்டை அரசு மாணவிகள் விடுதியில் ஐந்து சென்ட் பரப்பளவில் தோட்டம் அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமை வகித்தார். தோட்டக்கலைத்
துறை உதவி இயக்குனர் செந்தில்ராணி,
தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சர்மிளா பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை துறை சார்பில் கொய்யா, மா, தென்னை ,உட்பட மர கன்றுகளும் மாதுளை மற்றும் பழ வகை செடிகளும், மூலிகை பூங்கா , காய்கறி தோட்டங்கள் மாணவிகள் அமைத்தனர்.
தோட்டம் பராமரிக்க தேவையான இடுப்பொருட்கள் உபகரணங்களும் தோட்டகலை துறையினர் வழங்கினர். நிகழ்ச்சிகள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், விடுதி காப்பாளர் எழிலரசி,விடுதியின் கமிட்டி உறுப்பினர்கள் சரவணநடேசன், ரமேஷ் ,வேளாண் உதவி அலுவலர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.