17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் நாகைநல்லூர் ஏரி
திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்துள்ள நாகைநல்லூர் ஏரியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு452 ஏக்கர் கொள்ளளவு கொண்ட ஏரி நீர் நிரம்பி வழிந்ததால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஏரியில் மூலம் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெரும் 15 கிலோமீட்டர் சுற்றளவு வரை சுமார் 500 கிணறுகள் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும் வகையில் பயன்பெறும் நாகைய நல்லூர் ஏரி பெரியநாச்சி பட்டி கடகாலில் இன்று நீர் நிரம்பி வழிந்ததை கரட்டுப்பட்டி,பெரியநாச்சிப்பட்டி, ஆணைக்கல் பட்டி, நானா பட்டி, கொங்கம்பட்டி கல்லூர் பட்டி, மாமரத்துப்பட்டி, திம்மநாயக்கன்புதூர், கோழி செங்கம்பட்டிபுதூர், கவரப்பட்டி, கருங்காடு உள்ளிட்ட பகுதியிலிருந்து விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்..