ராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முத்தரசநல்லூரில் உள்ள ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் தலைமை நீர் ஏற்று நிலையத்திலிருந்து நீர் கொண்டு செல்லும் இராட்சச குழாய் கூடலூர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இன்று (12.11.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் நிருவாகப் பொறியாளர் (இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம்) ராஜசேகர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாக ஆனந்த், உதவிப் பொறியாளர் மணிகண்டன் உள்ளிட்ட நீர்வளத்துறை அலுவலர்கள் உள்ளனர்.