ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நால்வருக்கும் அறைகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் உண்மை இல்லை: மாவட்ட ஆட்சியர்

0 255
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு அறைகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் உண்மை இல்லை

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி விளக்கம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலை  செய்யப்பட்ட முருகன்,சாந்தன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். நான்கு பேருக்கும் அவர்கள் வருவதற்கு முன்பாகவே சிறப்பு முகாமில் அறைகள் தயார் செய்யப்பட்டிருந்தது –

இதே போல் புழல் சிறையில் இருந்து விடுதலையான ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் ஃபயாஸ் உள்ளிட்ட இருவரும் சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர் – முறையாக அறை ஒதுக்கியும் நாங்கள் உள்ளே செல்ல மாட்டோம் என்று வெளியே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

பின்னர் முறைப்படி வழிகாட்டுதலன்படி உங்களுக்கு ஒதுக்கிய அறைகளுக்குள் நீங்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதன் பின்னர் அதே அறையில் தங்கி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.