ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட நால்வரும் அவர்களின் சொந்த நாட்டிற்கு செல்ல நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் பேட்டி

0 389
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்,

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன்,  பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் மற்ற சிறைவாசிகளுக்கு உள்ளது போல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குகள் முடிந்த பின்பு அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல,அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.முருகன் உள்ளிட்ட நால்வரும்,தாங்கள் காலை, மாலை வேளையில் நடை பயிற்சி மேற்கொள்ள சிறை வளாகத்தில் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்  என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.