டிராக்டருடன் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

0 239
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் விவசாய நிலத்திற்கு உழவு ஓட்டச் சென்ற வாலிபர் டிராக்டரோடு கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

சிறுகனூர் அருகே ஊட்டத்தூரைச் சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மகன் சதீஷ்(21).இன்று காலை 10 மணிக்கு மேல் தனது சொந்த விவசாய நிலத்திற்கு உழவு ஓட்டுவதற்க்காக டிராக்டரில் சென்றுள்ளார்.அப்போது மிளகாய் சாகுபடி செய்த பயிர் சேதமடையாமல் இருப்பதற்காக டிராக்டரை ஒதுக்கி ஓட்டியுள்ளார்.இந்நிலையில் எதிர்பாராத விதமாக டிராக்டர் நழுவி விவசாய நிலத்திலிருந்த 90 அடி ஆழ கிணற்றில் டிராக்டரோடு சதீஸ் தவறி விழுந்தார்.

இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கும் சிறுகனூர் போலீசாருக்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த புள்ளம்பாடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பாரதி (பொருப்பு) சிறப்பு நிலைய போக்குவரத்து அமுதகுமார் வீரர்கள் ராபர்ட் கென்னடி, தரணிதரன், மோகன், பிரகாஷ்,அருண் ராஜ் உள்ளிட்டோ இரண்டு கிரேன் உதவியடன். டிராக்டரை மீட்டனர்.இதனைத் தொடர்ந்து பாதாள போர்சுடன் தண்ணீரில் மூழ்கிய சதீஸை தேடி வந்தனர்.சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வாலிபர் சதீஸை சடலமாக மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.