மணப்பாறை அருகே மின் வேலியில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (17). இவர் 12 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் நெல் வயல் பகுதிக்கு சென்ற போது அங்கு எலிக்கு மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் நிலையில் அந்த மின்வேலியில் சாந்தகுமார் எதிர்பாராத விதமாக சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக புத்தானத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோக மயமாக்கியது.