துப்பாக்கி குண்டுகளை திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

0 341
Stalin trichy visit

திருச்சி தென்னூர் ஹை ரோட்டில் கடந்த 25.10.22-ம்தேதி நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரவிந்த ( 28) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில்  அரவிந்த் என்பவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வீட்டில் துப்பாக்கி குண்டுகளை திருடியது சம்மந்தமாக ஒரு வழக்கும், தள்ளுவண்டி கடைக்காரர், பணியன் கடைக்காரர், இருசக்கர வாகன மெக்கானிக் ஆகியோரிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 3 வழக்குகளும், முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை எரித்து கொலை மிரட்டல் விடுத்ததாக 1 வழக்கு உட்பட 12 வழக்குகள் நிலுவையில் தெரிய வந்தது.

எனவே  அரவிந்த் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கத்தியை காட்டி பணம் பறிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் குற்றப்பிரிவு காவல்நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.