அருள்மிகு சாமவேதீஸ்வர் கோவிலில் 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடு
அருள்மிகு சாமவேதீஸ்வர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரம் சோமவாரத்தை முன்னிட்டு 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ லோகநாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் நடைபெற்றது.
கார்த்திகை மாதத்தில் விளக்கு ஏற்றினாலே நமக்கு இருள்கள் நீங்கி நல்ல ஒளிமயமான எதிர்காலத்தை இறைவன் நமக்கு அனுகிரகம் செய்கின்றார் அந்த வகையிலே நாம் எல்லோருக்கும் எல்லாவிதமான இருள்களும் நீங்கி நல்ல பிரகாசமான ஞான தீபத்தை இறைவன் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த 1008 தீபம் அனைத்து பக்தர்களோடு சேர்ந்து சமர்ப்பித்தனர்.
சாமவேதீஸ்வர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு
சங்காபிஷேகம் பஞ்சாட்சர மூல மந்திர ஹோமம், வேத மந்திர ஹோமம் எல்லாம் சேவிக்கப்பட்டு கார்த்திகை மாதத்தின் சிறப்பு தீபம் என்கின்ற வகையிலே ஆலயத்தின் கருவறை முதல் ஆலய பிரகாரம் வரை 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் சிறப்பான முறையில் நடைப்பெற்றது. அனைவரும் ஒற்றுமையோடும், மன நிம்மதியோடும் உடல் நலத்தோடும் இருக்க வேண்டியும் உலக நன்மையை கருதி பிரார்த்தனை செய்தனர். இந்த விழாவினை ஸ்ரீரங்கம் கோசாலா அமைப்பாளர் அனைவரும் சேர்ந்து இந்த வழிபாட்டினை சிறப்பாக நடத்தினார்கள் எல்லோருக்கும் எல்லா விதமான பிரசாதங்களும் வழங்கப்பட்டு ஸ்ரீ சாம வேதீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பாக இந்த பூஜையானது நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கார்த்திகேய செல்வி தலைமையில்
அர்ச்சகர்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்,செந்தில்நாத குருக்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.