கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

0 297
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெம்பர் 2 கரியமாணிக்கம் திருச்சி சேலம் சாலையில் கார் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
உடன் வந்த பெண் படுகாயம் அடைந்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் அப்பணநல்லூர் ஊராட்சியை சேர்ந்தவர் 50 வயதான மதியழகன். இவர் தற்போது திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகர் ராகவேந்திரா இல்லம் பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் இவர் காரில் முசிறியிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நம்பர் 2 கரியமாணிக்கம் திருச்சி சேலம் நெடுஞ்சாலை வந்து கொண்டிருந்தபோது கார் மீது எதிரே வந்த லாரி எதிர்பாராதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உடன் வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் படுகாயம் அடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மதியழகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.