அழுகுரல்களுடன் தொடரும் திருச்சி இலங்கை தமிழர்களின் 15வது நாள் போராட்டம்!

0 798
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாம் சிறையில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சுமார் 80க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களை இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் விடுவித்து வழக்குகளை வெளியிலிருந்து பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விடுதலைக்கான எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், நிரூபன், முகுந்தன் ஆகியோர் கடந்த 11ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். இதில் எவ்வித தீர்வும் எட்டப்படாததால் விரக்தியடைந்த முகாம்வாசிகளில் இருவர், கத்தியால் தங்களது கழுத்து மற்றும் வயிற்றை கிழித்துக்கொண்டனர். மேலும், 12 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றனர். மொத்தம், 16 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை தமிழர்கள், உணவு உண்ண மறுத்தும், முகாமில் இருப்பவர்கள் தொடர்ந்து 15வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர். மேலும் காவல் துறை சார்பில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.