108 வைணவ தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும்.

இங்கு மாதம்தோறும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது இன்று திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
உண்டியல்கள் திறந்து இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி , பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன் , திருவானைக்கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன், மேலாளர் உமா ஆகியோரின் முன்னிலையில் கோவில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணினர்.

இதில் ரூபாய் 28,83,705 இலட்ச ரூபாயும், 62 கிராமும் தங்கமும், 34 கிலோ 278 கிராமும் வெள்ளியும் (34278 கிராம்), வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 48-ம் கிடைக்கப்பட்டன.வெள்ளியின் அளவான 34 கிலோ 278 கிராம் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச அளவாகும்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய..https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8