மணப்பாறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மணப்பாறை திருச்சி ரோடு மாரியம்மன் கோவில் காந்தி சிலை உட்பட மணப்பாறை முக்கிய வீதியில் உள்ள 6 இடங்களில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மணப்பாறை முன்னால் நகர கழக செயலாளர் அகமது சரீப், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை தலைவர் மணவை.ஜெ.ஸ்ரீதரன்,மாவட்ட பிரதிநிதி இளையநிலா செல்வம், வார்டு செயலாளர்கள் பூக்கடை மூர்த்தி, ராதாகிருஷ்ணன், ஹேம்நாத்,விஜி,
பாஸ்கரன்,அப்பாஸ், செல்வராஜ், செந்தில்,ராகவன், சுரேந்தர்,கலையரசன்,முத்துகிருஷ்ணன், வீரசெல்வம், ஜெமீல், முத்துப்பாண்டி,பாலாஜி, மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தில் 6 நிர்வாகிகள் இரத்ததானம் கொடுத்தார்கள்.