காந்தி மார்க்கெட் மீன்சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் அருகே திருவெறும்பூர் செல்லும் வழியில் தினமும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி! கூடுதல் காவலர்களை நியமித்து சரி செய்ய கோரிக்கை
திருச்சி டிச 5 திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பிரபலமானது இது நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.இதனால் மக்களுக்கு பெரிய சவுரியங்களும் உண்டு அதே வேளையில் மிகுந்த சிரமங்களும் அவ்வப்பொழுது போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படுகிறது.இதனை போக்குவரத்து காவல்துறை பல நேரங்களில் சிரமப்பட்டு சரி செய்தாலும் சில நேரங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர்.இதனால் அப்பகுதியில் செல்லும் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் மாணவ மாணவியர்கள் என்று பலரும் பல்வேறு சூழல்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் காந்தி மார்க்கெட்டை திருச்சியின் புறநகர் பகுதிக்கு மாற்றுவதற்கு கடந்த ஆட்சிக் காலங்களில் எவ்வளவு முயற்சி செய்தும் அதிகாரி மற்றும் அரசியல்வாதிகளால் முடியவில்லை. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு எப்பொழுது கிடைக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை தற்பொழுது தினமும் காலை வேளையில் திருவெறும்பூர் காந்தி மார்க்கெட் திருவெறும்பூர் செல்லும் சாலை மீன் மார்க்கெட் பகுதியில் இருபுறமும் லோடு ஆட்டோவை நிறுத்தி வைத்து சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றனர் இதனால் பொதுமக்கள் காலை நேரத்தில் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல காலதாமதம் ஆகின்றது என்று புலம்புகின்றனர் காலை நேரங்களில் நீண்ட வரிசையில் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலால் காத்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து காவலர்கள் யாரும் அப்பொழுது வருவதில்லை தினமும் இதுபோல் நடக்கிறது என்று பேருந்து ஓட்டுநர்கள்,பயணிகள் அவ்வழியே காலை வேளையில் சென்று அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் ஆகியோர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.