அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த தம்பதி கைது

0 387
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் ஆன்லைன் மூலம் பட்டம் வழங்குவதற்காக அங்குள்ள இடத்தை மண்ண்சநல்லூர் வட்டாச்சியர் நில அளவையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் போது பணி செய்ய விடாமல் தடுத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

திருப்ஞ்சீலியில் உள்ள பாரதி நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வீடு இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா வழக்குவதற்காக அங்குள்ள இடத்தை நேற்று மணச்சநல்லூர் வட்டாச்சியர் சக்திவேல் முருகன் மற்றும் நில அளவையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளவிடும் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(63) அவரது மனைவி சந்தானகுமாரி ஆகியோர்(47)  நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திருப்பைஞ்சீலி கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் அளித்த புகார் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கம் மற்றும் அவரது மனைவி சந்தானகுமாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.