வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 7பவுன் சங்கிலி பறிப்பு

0 416
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடியில் உள்ள பட்டத்தலச்சி அம்மன் கோவில் அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாதா இரண்டு மர்ம நபர்கள் 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

மண்ணச்சநல்லூர் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி 42 வயதான சாருமதி. இவர் இன்று மதியம் உளுந்தங்குடியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். உளுந்தங்குடியில் உள்ள பட்டத்தலச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாதா இரண்டு மர்ம நபர்கள் சாருமதியை வாய்க்காலுக்கு தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.