சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும்.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உற்சவர் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் கேடயத்தில் புறப்படாகி தேருக்கு அருகில் எழுந்துருளுவார்.இதனைத் தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைடுத்து அம்மன் தேரோடும் வீதி வழியாக திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் .
சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வின் போது அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமயபுரம் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.