ஜன.2 வைகுண்ட ஏகாதசி விடுமுறை : மாவட்ட ஆட்சியர்

0 357
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு 02.01.2023 (திங்கட்கிழமை) அன்று விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும், ஆயினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகின்ற 07.01.2023 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிமாவட்ட ஆட்சித் தலைவர்.மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.