பழைய காவிரி பாலம் திறக்கப்படாது…..அமைச்சர் கே.என்.நேரு

0 796
Stalin trichy visit

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பழைய காவிரி பாலம் திறக்கப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித் துள்ளார்.ஸ்ரீரங்கம் -சிந்தாமணி பகுதியை இணைக்கும் காவிரி பாலத்தை சீரமைக் கும் பணிகள் செப்.10-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து வாகனங்களும் சென்னை பைபாஸ் சாலை வழியாக5கி.மீ தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும். இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் சென்னை புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு அதிகரித்துள்ளது.இதற்கு தீர்வுகாணும் வகையிலும், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டும் பழைய காவிரி பாலத்தை போக்குவரத்துக்கு திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்ததுடன்,அப் பாலத்தை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பழைய பாலம் திறக்கப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது. ‘காவிரி பாலத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏற்கெனவே சீரமைப்பு பணிகளை செய்தனர். அப்போது’பேரிங்’ இருக்க வேண்டிய இடங்களில் அதற்கு
பதிலாக ‘கான்கிரீட் கலவை’களைக் கொட்டி வைத்துவிட்டனர்.இதனால் தற் போது சீரமைப்பு பணிகளைச் செய்யும் போது ‘கான்கிரீட் கலவையை பிரித் தெடுத்து. அந்த இடத்தில் மீண்டும் ‘பேரிங்’ பொருத்துவதால், காலதாமதம் ஏற்பட்டுள்ளது.டிசம்பர் இறுதிக்குள் வேலையை முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், கூடுதலாக ஒரிரு வாரங்கள் ஆகலாம் என தெரிகிறது. எப்படியும் அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் பணிகளை முடித்துவிடுவோம்

Leave A Reply

Your email address will not be published.