சமயபுரம் மாரியம்மன் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகள்….போலீஸ் இன்ஸ்பெக்டரின் வித்தியாசமான முயற்சி
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகளை மீட்டு அறிவுப்பூர்வமான வகையில் நேரத்தை பயன்படுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வித்தியாசமான முயற்சி.பொதுமக்கள், பக்தர்கள் பாராட்டு.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.விஷேசம் மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அவதிக்கு உள்ளவதை கண்ட சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன்,தனிப்பிரிவு எஸ் ஐ ஜெயசீலன், முதல்நிலை காவலர் பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார் இதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் இளைப்பாறுவதற்காகவும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டவும் குழந்தைகளுக்கு பொழுது போக்குவதற்காக விளையாட்டுப் பொருட்களும் வாங்கி அதற்கென ஒரு தனி இடம் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் காரணமாக தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திற்காமல் ஓரிடத்தில் அமர்ந்து குழந்தைக்கு தேவையான உணவு அளிப்பதோடு,அங்கிருக்கும் விளையாட்டு பொருள்களை குழந்தைகளுக்கு கொடுத்து இளைப்பாறிய பின்பு சரியான நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான வகையில் நேரத்தை பயன்படுத்தும் வகையில் போலீஸ்இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் வித்தியாசமான முயற்சி ,பக்தர்கள்,தாய்மார்கள் பொதுமக்களும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.