தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 410
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வால்மால்பாளையம் கீழூரில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மண்ணச்சநல்லூர் அருகே வால்மால் பாளையம் கீழூரில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ். இவருடைய மனைவி சரண்யா(28) . இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. சரண்யாவிற்கு அமாவாசை வரும் நேரங்களில் சற்று மனநலம் பாதிப்பதும் உடல் உபாதை ஏற்படுவதும் வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21 ந்தேதி மாலை 5 மணி அளவில் அவரது வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 3 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.