ஸ்ரீரங்கம் காவல் நிலைய பயன்பாட்டிற்கு அதிநவீன காவல் சோதனை சாவடி

0 349
Stalin trichy visit

திருச்சி மாநகர்  காவல் ஆணையர் கார்த்திகேயன்,  திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் தணிக்கை செய்வதற்காக திருச்சி மாநகரத்தின் எல்லையில் ஏற்கனவே 8 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் சோதனை சாவடி எண்.5 செய்யப்பட்டுவந்தது.

இந்நிலையில், திருச்சி காவிரி பாலம் ஓயாமரி செல்லும் அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை-திருச்சி செல்லும் தேசியநெடுஞ்சாலை, ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Y ரோடு ஜங்சன் பகுதியில் காவல் சோதனை சாவடி எண்.5 அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது.

இதனைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட இடத்தில் வாகன எண்களை கண்டறியும் தானியங்கி கேமராக்கள்-2 மற்றும் பொது முகவரி அமைப்பு (PA System) ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய இரும்பு தடுப்பான்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-5ன் புதிய கட்டிடம் இன்று 03.01.23-ஆம் திருச்சி மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன்,  தொடங்கி வைத்தார். இங்கு 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-5ஆனது இப்பகுதியில் நிறுவப்பட்டதினால், திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், சட்ட விரோத நபர்களை கண்காணிக்கவும், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள திருவானைக்கோவில் அழகிரிபுரம், திம்மராயசமுத்திரம், கொண்டயம்பேட்டை, கல்லணை ரோடு, திருவளர்ச்சோலை ஆகிய இடங்களில் நடைபெறும் குற்றசம்பவங்களை முன்கூட்டியே தெரிந்து தடுக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.