இலால்குடி பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

0 346
Stalin trichy visit

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.