பெண் குழந்தையை விற்ற வழக்கில் வக்கீல் உட்பட மேலும் 3 பேர்

0 424
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெண் குழந்தையை விற்ற வழக்கில் குழந்தையின் தாயை கைது செய்த நிலையில் அதற்கு உடைந்தையாக இருந்த வக்கீல் உட்பட மேலும் மூன்று பேர் போலீசார் கைது செய்தனர்.

லால்குடி அருகே மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி(32).  இதேபோல் லால்குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(42).  இவர் லால்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மனைவி  சண்முகவள்ளி(38).  வக்கீல் பிரபு அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஜானகி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன் மூலம் ஜானகிக்கும் பிரபுவிற்க்கும் நட்பு ஏற்பட்டது.இந்த நிலையில் ஜானகி திருமணம் ஆகமலேயே தவறான உறவால் கர்ப்பமடைந்தார். ஏழு மாத கர்ப்பிணியாக  இருந்த ஜானகி கருவை கலைக்க வக்கீல் பிரபு மற்றும் அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை அனுகினார். குழந்தை பிறந்ததும் அதனை விற்று விடலாம் என முடிவு செய்தனர். இந்நிலையில் ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து குழந்தையை பிரபுவிடம் ஒப்படைத்தார். பிரபு குழந்தையை லால்குடி அருகே மணக்கால் சூசையாபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (30) என்பவர் மூலம் ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஒருவரிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.ஆனால் பிரபு குழந்தையை ஒரு லட்சத்துக்கு மட்டுமே விற்பனை செய்ததாகவும் அதில் தான் 20 ஆயிரம் கமிஷனாக எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்து மீதமுள்ள 80 ஆயிரத்தை ஜானிகியிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ஜானகி நகைகளை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்கிடையே குழந்தை 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பிரபு சண்முகவள்ளி ஆகியோர் விற்றது ஜானகிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி குழந்தை விற்ற தகவலை போலீஸிடம் தெரிவிக்காமல் குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும் அதன் பின் காணாமல் போய்விட்டதாகவும் எனவே குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.இது தொடர்பாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் விசாரணைனை நடத்தினார். இந்நிலையில் புகார் கொடுத்த ஜானகி மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் ஜானகியின் விருப்பத்தின் பேரிலேயே குழந்தையை பிரபு மற்றும் அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் சேர்ந்து ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்றது தெரிய வந்த்து. மேலும் ஜானகி குழந்தை காணாமல் போய் விட்டதாக நடமாடியதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்த கடந்த 6 ம் தேதி இரவு ஜானகியை கைது செய்தனர் .இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் பிரபு அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி மற்றும் ஆகாஸ் ஆகியோரை கைது செய்தனர்.பின்னர் அவர்களை லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விற்கப்பட்ட குழந்தை யாரிடம் உள்ளது குழந்தை விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.