சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே நம்பர் 2 கரியமாணிக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வாத்தலை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பெரியமணி பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம்போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது நம்பர் 2 கரியமாணிக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான அருண், 20 வயதான வினோ, 31 வயதான பிரதீப், 45 வயதான சுப்பிரமணி ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலைய பனையில் விடுவித்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 200 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.