சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபர் சாவு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தென்காலில் உள்ள லால்குடி அரியலூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
லால்குடி அருகே தென்கால் பகுதியில் உள்ள லால்குடி அரியலூர் சாலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிளில் மோதிவிட்டு தப்பி சென்றது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தபோலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வாகனத்தை தேடி வருகின்றனர்.