எரிமேடை மயானம் வசதி செய்து தரக்கோரி வி.சி.க.வினர் மனு

0 310
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாபேட்டை ஒன்றியம் வாளவந்தி கிராமத்தில் 180 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இம்மக்களுக்கான ஈம காரியம் செய்வதற்கான எரிமேடை மற்றும் மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அழித்தும் எவ்வித மேல் நடவடிக்கையும் இல்லாததால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் எரிமேடையுடன் கூடிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டி முசிறி கோட்டாட்சியர் மாதவனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முசிறி சட்டமன்றத் தொகுதி செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் கேட்டு வசதி செய்து தர ஆவண செய்வதாக கூறினார். இந்நிகழ்வில் வாளவந்தி கிராம பொதுமக்கள் மற்றும் விசிக பொறுப்பாளர்கள் சரவணகுமார், சூர்யா, ரத்தினம், அஜய், எழிலரசன், சேகர், முத்துச்செல்வன், நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மேலும் இது குறித்து தாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முசிறி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.