நூலக கட்டிடத்தில் புகுந்த பாம்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று இரவு 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. லால்குடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை மீட்டனர்.
தச்சங்குறிச்சி ஊராட்சியில் உள்ளது நூலகம். இந்த நூலகத்தை குமளூரில் உள்ள கல்லூரி மாணவர்கள்பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த நூலகத்தில் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தச்சங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் அசோக்,விஜய், மனோஜ் குமார், சாகுல் ஹமீது,விஜய் அமிர்தராஜ் ஆகியோர் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப் பகுதிக்குள் பாம்பை விடுவித்தனர்.