தனியாக வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்பு

0 335
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பழனியப்பா காம்ப்ளக்ஸ் குடியிருப்பில் வசித்து வந்த முதியவர் நேற்று இரவு சடலமாக மீட்பு.

திருச்சி வரகனேரி வெல்டர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  மோகன்(61). இவர் மனைவியிடம் விவகாரத்து பெற்றுக் கொண்டு குழந்தைகளை பிரிந்து தனியாக நம்பர் 1 டோல்கேட் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பிச்சாண்டார் கோயில் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான பழனியப்பா காம்ப்ளக்ஸ் குடியிருப்பு பகுதியில் கடந்த நான்கு வருடமாக வாடகைக்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர்கள் வீட்டின் உரிமையாளரான செந்திலுக்கு போன் செய்து தகவல் கூறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை திறந்து பார்த்தபோது முதியவர் நாக்கை கடித்துக் கொண்டு சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலறிருந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி. உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இயற்கையாகவே இறந்தார என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.