வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

0 322
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் உள்ள ஏஞ்சல் கார்டன் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை.லால்குடி தீயணைப்பு வீரர்கள்  மீட்டனர்.

லால்குடி அருகே வாளாடி ஏஞ்சல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் இவரது வீட்டில் நேற்று 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பயத்தில் வெளியே ஓடி வந்தனர்.இதுகுறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திள்க்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் இளங்கோவன் வீரர்கள் ராஜா, சுரேஷ், மணிகண்டன், பிரபு ஆகியோர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.