வரதட்சணை கொடுமை: மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் குடும்பத்தினருடன் தர்ணா

0 339
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், லால்குடி அனைத்து காவல்நிலையத்தில் வரதட்சணை கொடுமை குறித்து கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் அவரது கைக்குழந்தை மற்றும் பெற்றோருடன் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் கடந்த 7 ம் தேதி ஈடுபட்டார். இதனடிப்படையில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் 4 பிரிவின் கீழ் கணவர்,மாமனார் மற்றும் மாமியார் என 3 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்னா (24). இவருக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் சூளை பகுதியைச் சேர்ந்த கந்தவேல் மகன் பிரசாந்த் (27). இவர் பொறியியல் பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து திருமணமாகி 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு கர்நாடக மாநிலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரசாந்த். இந்நிலையில் பிரசாந்த் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தது குறித்து அவரது செல்போனில் பதிவு செய்துள்ளாராம்.

இது குறித்து மனைவி அபர்னா, கணவர் பிரசாந்திடம் கேட்டதற்கு, அபர்னாவைஅடித்து உதைத்து, மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள நெய்குப்பை கிராமத்தில் உள்ள அபர்னாவின் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். மேலும் அபர்னாவின் பெற்றோர்களிடம் வரதட்சனை கொடுத்தால் தான் உங்கள் பெண்ணோடு சேர்ந்து வாழ்வேன் எனக்கூறி அவர்களையும் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார் பிரசாந்த்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அபர்னை லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அபர்னா தனது ஒரு வயது பெண் குழந்தை. மற்றும் அபர்னாவின் பெற்றோருடன் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை கண்டித்து லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் காவல் நிலையத்திற்கு வந்து அபர்னா அவரது பெற்றோரிடம் விசாரணை செய்து, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டத்தினை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து லால்குடி அனைத்து மகளிர் போலீசார் கணவர் பிரசாந்த் மற்றும் அவரது தாய் சரோஜா,தந்தை கந்தவேல் ஆகிய மூன்று பேர் மீது நான்கு பிரிவின் கீழ் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.