திருவெறும்பூரில் சாலை பாதுகாப்பு வார விழா

0 300
Stalin trichy visit

திருச்சி,ஜன.21  திருவெறும்பூர்வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் சாலை பாதுகாப்பு வார விழாநடந்தது.

திருச்சி கலெக்டர் உத்தரவின் பேரில் துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருவெறும்பூர் மோட்டார் ஆய்வளர் செந்தில்குமார் தலைமையில் திருவெறும்பூர் ஆர்டிஓ அலுவலகம் சார்பில் 34வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட் கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள்
நடந்தது.

அதன் ஒருப்படுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி, பாதுகாப்பு மற்றும் விபத்து தொடர்பான காணொளி குறும்படம் ஒன்று அலுவலகத்தில் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிரதிபலிக்கும் ஒளிரும் பட்டைகள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது.

வாகன ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம், பெல் நிறுவன ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பெல் வளாகத்தில் உள்ள பெண்கள்பயிலும் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.