அன்பில் அறக்கட்டளை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

0 297
Stalin trichy visit

திருச்சி, ஜன.21 திருச்சி எஸ்.அய்.டி.யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழியின் துணைவியார் ஜனனி மகேஸ் பொய்யாமொழி வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார்.
இம்முகாமில் 150க்கும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதுவரை 600 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துணைவியார் வழங்கினார்.  இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு மேல் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி அன்பில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, வாளாடி கார்த்திகேயன் எஸ்.அய்.டி.யின் முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.