6 வயது சிறுமி பாலியல் துன்புறுதல் செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
வீட்டின்முன்பு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 25 காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.7,000/- அபராதம் விதித்து மகிளா நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 16.03.2020-ந்தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவதானத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.03.2020-ம்தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து, கீழதேவதானத்தை சேர்ந்த செல்வமணி (25)என்பவர் கைது செய்யப்பட்டு, கடந்த 23.07.2020-ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி ஸ்ரீவத்சன் விசாரணையை முடித்து இன்று 20.01.2023-ம்தேதி, மேற்படி செல்வமணி என்பவருக்கு ச/பி 366 IPC ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000/- அபராதமும், ச/பி 5(m) r/w 6(i) POCSO Act-ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், ஆக (மொத்தம் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.7,000/- அபராதம்) விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5லட்சம் இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் அருள்செல்வி ஆஜரானார்கள்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணையில் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்பிரியா பாரட்டினார்.