அரியமங்கலம் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

0 345
Stalin trichy visit

திருச்சி, ஜன.21 திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பணியினை மராமத்து செய்யும் பணி இன்று நடைபெற இருப்பதால் தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதப்புரம் புதியது, ஜெகநாதப்புரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 11 மேல்நிலை நீர்தேக்கத்தொட்கள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு நாளை 22.01.2023 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 23.01.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.