தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
முசிறி காவிரி ஆற்றில் தை அம்மாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி திதி கொடுத்து தர்பணம் செய்தனர்.
திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தை, ஆடி, புரட்டாசி உள்ளிட்ட அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் இன்று தை அமாவாசை என்பதால் திருச்சிமுசிறி காவிரி ஆற்றில் தை அம்மாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி திதி கொடுத்து தர்பணம் செய்தனர்.ஏராளமான மக்கள் ஒன்று கூடி வாழை இலை, பூஜை பொருட்கள், அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்று ஆர்வமுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்